பாதை காட்டும் மா யெகோவா


Guide me O Thou great Jehovah
Mannheion.  Rhondda

324                                              8, 7, 8, 7, 4, 7

1.         பாதை காட்டும், மா யெகோவா,
                        பரதேசியான நான்
            பலவீனன், அறிவீனன்,
                        இவ்வுலோகம் காடுதான்;
                                    வானாகாரம்
                        தந்து என்னைப் போஷியும்.

2.         ஜீவ தண்ணீர் ஊறும் ஊற்றை
                        நீர் திறந்து தாருமேன்;
            தீப மேக ஸ்தம்பம் காட்டும்
                        வழியில் நடத்துமேன்;
                                    வல்ல மீட்பர்!
            என்னைத் தாங்கும், இயேசுவே.

3.         சாவின் அந்தகாரம் வந்து
                        என்னை மூடும் நேரத்தில்
            சாவின் மேலும் வெற்றி தந்து,
                        என்னைச் சேர்ப்பீர் மோட்சத்தில்
                                    கீத வாழ்த்தல்
                        உமக்கென்றும் பாடுவேன்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே