புல்லைப்போல் எல்லாரும் வாடி


Alle Menschen mussen sterben
Bavarian 10

395                                                             8, 7, 8, 7, 8, 8, 7, 7.

1.         புல்லைப்போல் எல்லாரும் வாடி
                        போறோம் சாகார் இல்லையே
            சாவில்லாமல் சீரும் மாறி
                        புதிதாகக் கூடாதே;
            நீதிமான்கள் பரலோக
            வாழ்வின் மகிமைக்குப் போக
                        இச்சரீர பாடெல்லாம்
                        முன் அழியத் தேவையாம்

2.         ஆகையால் சந்தோஷமாக
                        ஸ்வாமி கேட்கும் வேளையில்
            நானும் போறேன்; இதற்காக
                        துக்கமில்லை, ஏனெனில்
            எனக்காய்க் குத்துண்டிறந்த
            இயேசுவால் மன்னிப்பைக் கண்ட
                        எனக்கவர் காயங்கள்
                        சாவில் போந்த ஆறுதல்

3.         இயேசு எனக்காய் மரித்தார்
                        அவர் சாவென் லாபமாம்;
            எனக்கு ரட்சிப்பளித்தார்,
                        ஆகையால் சிங்காரிப்பாம்;
            மேன்மை தெய்வ மண்டலத்தை
            சேர்ந்து ஏக திரித்துவத்தை
                        நித்தம் பார்க்க மண்ணை நான்
                        விட்டுப் போக ஆசைதான்.

4.         அங்கே மெய்ச் சந்தோஷம் உண்டு
                        அங்கே கோடி நீதியர்
            வான ஜோதியால் சூழுண்டு,
                        அப்போதே கொண்டாடுவர்
            தூதரோடொன்றாய்க் குலாவி;
            ஆ, பிதா குமாரன் ஆவி,
                        தூய தூய தூயரே
                        என்று பாடுவார்களே.

5.         அங்கே கோத்திரப் பிதாக்கள்
                        ஞான திஷ்டிப் புருஷர்,
            இயேசு ஸ்வாமியின் சீஷர்கள்
                        என்றும் வாசம் பண்ணுவார்;
            அவ்விடம் சன்மார்க்கத்தார்கள்
            ஒன்றாய்ச் சேர்ந்திருக்கிறார்கள்;
                        அங்கே என்றும் ஓதிய
                        இன்பச் சொல் அல்லேலூயா.

6.         ஆ எருசலமே, வாழ!
                        உன் மினுக்கே அழகு;
            உன்னில் தோத்திர கிண்ணார
                        வாத்தியம் தொனிக்குது!
            ஆ, சந்தோஷம், ஆ, களிப்பு!
            இப்போ பகலோன் உதிப்பு;
                        இப்போ நித்த ஒளிவு
                        எனக்கு விடியுது.

7.         அந்த மோட்ச மகிமையை
                        அப்போதே கண்ணோக்கினேன்;
            வானவரின் வெண்ணுடையை
                        பெற்று, பூண்டு கொள்ளுவேன்.
            நான் பொற் கிரீடத்தை தரிக்க
            மாளா வாழ்வுமாய்க் கெலிக்க,
                        ஸ்வாமி ஆசனத்துக்கு
                        சேரும் வேளை வந்தது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு