முள் கிரீடம் பூண்ட நாதனார்


The Head that once was crowned with thorns

Nottingham

270                                         C.M.

1.         முள் கிரீடம் பூண்ட நாதனார்
                        மா மாட்சி பெற்றாரே;
            விண் கிரீடம் இப்போ சூடினார்
                        வென்றோராம் வீரரே.

2.         உன்னத ஸ்தானம் விண்ணிலே
                        இவர்க்கே சொந்தமாம்;
            மன்னாதி மன்னர் கர்த்தரே
                        விண் மாட்சி ஜோதியாம்

3.         அண்ணலின் நாமம் அன்பையும்
                        நன்றாய் அறிந்தோராம்
            விண்ணோர் மண்ணோர் மகிழ்ச்சியும்
                        இம் மீட்பர் நாதராம்.

4.         சிலுவையின் மா நிந்தையும்
                        பேரருள் பெறுவார்,
            நிலையாம் நாமம் பூரிப்பும்
                        அன்னோர் அடைகுவார்.

5.         நாதர் போல் பாரில் பாடுற்றே
                        அவரோடாள்வாராம்;
            தெய்வன்பின் மறை அறிவே
                        சந்தோஷம் பலனாம்.

6.         சிந்தை சாவான சிலுவை
                        நம் ஜீவன் சுகமாம்
            நம் சம்பத்து, நம் நம்பிக்கை
                        நம் ஓயா தியானமாம்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே