மகா அதிசயங்களைச்
Sei Lob und Ehr dem hochsten Gut
Bavarian 47
11 8,
7, 8, 7, 8, 8, 7
1. மகா
அதிசயங்களைச்
செய்தென்னைப்
பூரிப்பித்து,
உபத்திரவத்தின் பாரத்தை
இரக்கமாய்க்
கழித்து,
ரட்சிக்கிற தயாபரர்
ஸ்தோத்திரிக்கப்பட்டவர்;
கர்த்தாவுக்குப்
புகழிச்சி.
2. கர்த்தாதி கர்த்தா, தேவரீர்
யாவற்றையும்
நன்றாகச்
சிஷ்டித்துத் திட்டம்பண்ணினீர்
என்றும்மைப்
பணிவாக
விண்மண் கடல் ஆகாசத்து
சேனைத்
திரள்கள் போற்றுது;
கர்த்தாவுக்குப் புகழிச்சி.
3. சிஷ்டித்ததைப் பராபரன்
காப்பாற்றி,
நித்தம் தாமே
அன்பின் பராமரிப்புடன்
நடத்தச்
சித்தமாமே;
அவரதுவிசாரிப்புக்
குறையில்லாததானது,
கர்த்தாவுக்குப்
புகழிச்சி.
4. ஆ, கேளும் என் தன் துன்பத்தில்
கர்த்தாவைக்
கெஞ்சிவந்தேன்
அப்போது ஏற்றவேளையில்
மகா
ரட்சிப்பைக் கண்டேன்,
இதற்கென் நாவே, கீதம்சொல்
என்னோடெல்லோரும் பாடுங்கள்,
கர்த்தாவுக்குப்
புகழிச்சி.
5. கர்த்தர் எந்நாளும் தமது
ஜனத்தைக்
கைவிடாரே,
கண்ணோக்கித்தேற்றி ரட்சித்து
சகாயம்
செய்கின்றாரே;
இருளில் இடற வொட்டார்,
தாய்போல் கைதந்தழைக்கிறார்
கர்த்தாவுக்குப்
புகழிச்சி.
6. பூலோகத்தாரின் ஆறுதல்
துணையும்
அன்புங் கூட
ஆவியும் பொழுதேழைகள்
திரும்பக்
கழிகூர,
மிகுந்த தெய்வத் தயவு
சம்பூரணம் ஈகின்றது;
கர்த்தாவுக்குப்
புகழிச்சி.
7. நான் தேவரீரை என்றைக்கும்
மகிழ்ச்சியாய்த்
துதிப்பேன்;
நான் உம்மை நித்தநித்தமும்
புகழிந்து
தோத்திரிப்பேன்,
என்
ஆத்துமமும் தேகமும்,
கர்த்தாவே உம்மைப் போற்றவும்;
கர்த்தாவுக்குப்
புகழிச்சி.
8. மெய் மார்க்கத்தாரே, கர்த்தரைத்
துதித்துக்கொண்டிருங்கள்,
அவருடைய நாமத்தை
எந்நேரமும்
தொழுங்கள்.
பொய்த் தேவர் செவிடூமையர்,
கர்த்தா கர்த்தாவே ஆண்டவர்;
கர்த்தாவுக்குப்
புகழ்ச்சி.
9. நாம் தெய்வ சன்னிதியிலே
மகா
மகிழ்ச்சியாக
வந்துன்னதக் கர்த்தாவையே
வணக்கஞ்
செய்வோமாக
பராபரனைப்போலே யார்,
யாவற்றையும் நன்றாக்கினார்;
கர்த்தாவுக்குப்
புகழ்ச்சி.
Comments
Post a Comment