வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்


How bright these glorious spirits shine

Beatitudo

168                                                                                 L.M.

1.         வெள்ளங்கி பூண்டு மாட்சியாய்
                        நிற்கும் இப்பாக்கியர் யார்?
            சதா சந்தோஷ ஸ்தலத்தை
                        எவ்வாறு அடைந்தார்?

2.         மிகுந்த துன்பத்தினின்றே
                        இவர்கள் மீண்டவர்
            தம் அங்கி கிறிஸ்து ரத்தத்தில்
                        தூய்மையாய்த் தோய்த்தவர்

3.         குருத்தோலை பிடித்தோராய்
                        விண் ஆசன முன்னர்
            செம் ஜோதியில் தம் நாதரை
                        இப்போது சேவிப்பர்.

4.         வெம்பசி, தாகம் வெய்யிலும்
                        சற்றேனும் அறியார்;
            பகலோனாக ஸ்வாமிதாம்
                        நற்காந்தி வீசுவார்.

5.         சிங்காசனத்தின் மத்தியில்
                        விண் ஆட்டுக்குட்டிதாம்,
            மெய் அமிர்தத்தால் பக்தரை
                        போஷித்துக் காப்பாராம்.

6.         நல் மேய்ச்சல், ஜீவ தண்ணீர்க்கும்
                        அவர் நடத்துவார்;
            இவர்கள் கண்ணீர் யாவையும்
                        கர்த்தர் தாம் துடைப்பார்.

7.         நாம் வாழ்த்தும் ஸ்வாமியாம் பிதா,
                        குமாரன் ஆவிக்கும்,
            நீடூழி காலமாகவே
                        துதி உண்டாகவும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே