வாழ்க பாக்கிய காலை


Welcome happy morn

Hermas

131                                               11, 11, 11, 11 with refrain

1.        'வாழ்க பாக்கிய காலை!' என்றும் கூறுவார்:
            இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்!
            மாண்டோர் ஜீவன் பெற்றீர், நித்திய தெய்வமாம்
            உம்மைச் சிஷ்டி யாவும் தாழ்ந்து சேவிக்கும்.
                        'வாழ்க பாக்கிய காலை' என்றும் கூறுவார்;
                        இன்று சத்துரு நாசம்! இன்றே மீட்பின் நாள்!

2.         துளிர் காலம் பூண்டு பூமி மகிழ்ந்தே,
            மீளும் ராயர் பின்செல் நற்பேறெனவே;
            பசும் புல் வயல் பூவும் துளிர் இலையும்
            துக்கம் அற்றார், வெற்றி கொண்டார் என்குதே.

3.         மாதங்கள் தொடர்பும், நாட்கள் நீடிப்பும்,
            ஓடும் நிமிஷமும் உம்மை வாழ்த்துதே;
            காலை ஒளியும், விண், வயல், கடலும்
            இருள் வென்ற வேந்தே, உம்மைப் போற்றுதே.

4.         நீர் எம் மீட்பர், கர்த்தர், ஜீவன், சுகமாம்,
            நீர் பிதாவின் திவ்விய ஏக சுதனம்;
            நரர் சுபாவம் போக்க கிருபை பூண்டீர்,
            மாந்தர் மீட்படைய மானிடன் ஆனீர்.

5.         ஜீவ காரணர் நீர் சாவுக்குட்பட்டீர்,
            மீட்பின் பலம் காட்ட பாதாளம் சென்றீர்;
            இன்று மூன்றாம் நாளில் எழுந்திருப்பேன்,
            என்று சொன்ன வாக்கை நின்று காருமேன்.

6.         பேயால் கட்டுண்டோரின் சிறை நீக்குமே,
            வீழ்ந்தோர் யார்க்கும் புனர் ஜீவன் தாருமே;
            மாந்தர் யார்க்கும் ஜோதி முகம் காட்டுமே,
            உமதொளி தந்து எம்மைக் காருமே.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு