31 October 2018

ஆ மேசியாவே வாரும்

ஞாபா:330

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

330. Cruger, Meirionydd                                                       7, 6, 7, 6, D.

 

"Hail to the Lord's Anointed"

 

1.       மேசியாவே வாரும்,

                        தாவீதின் மா மைந்தா!

            பார் ஆள ஏற்ற காலம்

                        நீர் வந்தீர் மா கர்த்தா;

            சிறைகளையே மீட்டு

                        கொடுங்கோல் முறிப்பீர்;

            சிறப்பாய் நீதி செய்து

                        பாவமும் போக்குவீர்.

 

2.         நிஷ்டூரம் யாவும் நீக்கி

                        சகாயம் நல்குவீர்;

            கஷ்டத்தில் ஏழை தேற்றி,

                        நல் பலம் ஈகுவீர்;

            மாய்வோர் திரளை மீட்டு

                        களிப்பால் நிரப்பி,

            உய்விப்பீர் ஒளி ஈந்து

                        இருளை அகற்றி.

 

3.         நல் மாரிபோல் நீர் வாரும்

                        இப்பூமி செழிக்க;

            நம்பிக்கை மகிழ்வன்பும்

                        எங்கெங்கும் மலர;

            நாதர் முன் தூதனாக

                        நற் சமாதானமும்

            நீதியும் நதியாக

                        எங்கெங்கும் பாய்ந்திடும்.

 

4.         விழுவார் தாழ்ந்து வேந்தர்

                        பொன் போளம் படைத்தே;

            தொழுவாரே, பார் மாந்தர்

                        துதித்துப் பாடியே;

            ஓயா மன்றாட்டு ஸ்தோத்ரம்

                        சமூகம் ஏறிடும்;

            ஒழியாதோங்கும் ராஜ்யம்,

                        என்றும் நிலைத்திடும்.

 

5.         மாற்றார் எல்லாரும் மாய

                        மாண்பாக ஆளுவீர்;

            பேற்றின்மேல் பேறுண்டாக

                        ஆண்டாண்டும் ஆளுவீர்;

            நிற்கும் ஓயாத காலம்

                        உமது ஆணையே;

            அன்பாம் உமது நாமம்

                        ஆம் சதாகாலமே.

ஆண்டவா உமக்கே ஸ்தோத்ரம்

ஞாபா:329

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

329. Austria                                                               8, 7, 8, 7, D.

 

1.       ஆண்டவா, உமக்கே ஸ்தோத்ரம்,

                        அடியேனைக் காத்தீரே

            மீண்டும் என்னை உமக்கேற்ற

                        சேவை செய்ய கொள்வீரே;

            என் இதயம் மனம் செயல்

                        யாவும் உம்மைத் துதிக்கும்;

            ஆண்டவா, உமக்கே ஸ்தோத்திரம்!

                        அடியேனை ஆட்கொள்ளும்.

 

2.         இவ்வுலக வாழ்நாள் எல்லாம்

                        நான் உமக்காய் வாழவும்

            அன்பு, தியாகம், அருள், பக்தி

                        அனைத்தும் பெற்றோங்கவும்,

            பாவ அழுக்கெல்லாம் நீக்கி

                        தூய பாதை செல்லவும்,

            ஆண்டவா, உம் அருள் தாரும்

                        அடியேனை ஆட்கொள்ளும்.

 

3.         வியாதி, துக்கம், தொல்லை வந்தால்

                        உம்மை நோக்கிக் கெஞ்சுவேன்;

            உம் பிரசன்னம் எனக்கின்பம்

                        சாவுக்கும் நான் அஞ்சிடேன்;

            துன்பத்தில் என் நண்பர் நீரே,

                        இன்பம் ஈபவர் நீரே,

            ஆண்டவா, நீர்தாம் என் தஞ்சம்,

                        அடியேனை ஆட்கொள்ளும்.

 

4.         மூவராம் திரியேகர்க் கென்றும்,

                        மாட்சி மேன்மை மகிமை,

            விண்ணில் தூதர் தூயர் கூட்டம்

                        அவர் நாமம் துதிக்கும்;

            மண்ணில் மாந்தர் கூட்டம் யாவும்

                        அவர் பாதம் போற்றவும்,

            ஆண்டவா, உம் அருள் தாரும்,

                        அடியாரை ஆட்கொள்ளும்.

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...