சந்தோஷ விண்ணொளியே


565
                        சந்தோஷ விண்ணொளியே - இயேசு
                        சாந்த சொரூபி அவர்
                        பள்ளத்தாக்கின் லீலி சாரோனின் ரோஜா
                        பாரில் மலர்ந்துதித்தார்

1.         இன்பப் பரலோகம் துறந்தவர்
            துன்பம் சகித்திட வந்தவர்
            பாவ மனிதரை மீட்டவர்
            பலியாகவே பிறந்தார்    - சந்தோஷ

2.         பூலோக மேன்மைகள் தேடாதவர்
            பேரும் புகழும் நாடாதவர்
            ஒன்றான மெய் தேவன் இயேசுவே
            என் ஆத்ம இரட்சகரே - சந்தோஷ

3.         ஜீவன் வழி சத்தியம் எல்லாமிவர்
            தேவாதி தேவ சுதன் இவர்
            இயேசு அல்லாமல் வேறு யாருமில்லை
            இரட்சண்யம் ஈந்திடவே - சந்தோஷ

4.         ஆடம்பர வாழ்வை வெறுத்தவர்
            அண்ணல் எளிமையாய் வாழ்ந்தவர்
            எம்மைத் தம்மைப் போல மாற்றிடும்
            இயேசுவைப் பின்பற்றுவோம்     - சந்தோஷ

5.         எங்கள் சமாதான பிரபு இவர்
            இயேசு அதிசயமானவர்
            வேதம் நிறைவேறும் காலமே
            வேகம் வருகின்றாரே     - சந்தோஷ

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு