ஏன் இந்தப் பாடுதான்


ஏன் இந்தப் பாடுதான்

44. (91) செஞ்சுருட்டி                                             ஆதி தாளம்

பல்லவி
                   ஏன் இந்தப் பாடுதான்!-சுவாமி
                   என்ன தருவேன் இதற் கீடுநான்?

அனுபல்லவி
    ஆனந்த நேமியே[1] - எனை ஆளவந்த குரு சுவாமியே   - ஏன்

சரணங்கள்

1.         கெத்செமனே யிடம் ஏகவும்,-அதின்
            கெழு[2] மலர்க் காவிடை போகவும்,
            அச்சயனே, மனம் நோகவும்,-சொல்
            அளவில்லாத் துயரமாகவும், - ஏன்

2.         முழுந்தாள் படியிட்டுத் தாழவும்,-மும்
            முறை முகம் தரைபட விழவும்,
            மழுங்கத் துயர் உமைச் சூழவும்,-கொடு
            மரண வாதையினில் மூழ்கவும், - ஏன்

3.         அப்பா, பிதாவே, என்றழைக்கவும்,-துயர்
            அகலச் செய்யும், என்றுரைக்கவும்,
            செப்பும் உன் சித்தம் என்று சாற்றவும்,-ஒரு
            தேவதூதன் வந்து தேற்றவும், - ஏன்

4.         ஆத்துமத் துயர் மிக நீடவும்,-குழம்
            பாக உதிர வேர்வை ஓடவும்,
            சாத்திர மொழிகள் ஒத்தாடவும்,-உந்தன்
            தாசரும் பதந்தனை நாடவும். - ஏன்
- ஏசுதாசன் அண்ணாவியார்


[1]. கடல்
[2]. நிறமுள்ள

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு