11 December 2018

பெத்லகேம் சின்ன ஊரில் பிறந்தார்


அதிசயம் Vol.10

            பெத்லகேம் சின்ன ஊரில் பிறந்தார் தேவ பாலன்
            பிறக்கும் முன்னே இயேசு என்று பெயரை பெற்ற ராஜ ராஜன்
            உனக்காய் எனக்காய் நமக்காய் பிறந்தாரே
            மரி அன்னை மடியிலே மழலையாய் தவழ்ந்தாரே

1.         காணாமல் போன நம்மை தேடி வந்த தேவன்
            வீணான மனிதர் நம்மை மீட்க வந்த தேவன்
            பாழான உலகில் நம்மை பார்க்க வந்த தேவன்
            நேரான வழியில் நம்மை நடத்த வந்த தேவன்
                        பிறந்தார் பிறந்தார் விண்ணின் மேன்மையே
                        பிறந்தார் பிறந்தார் மண்ணின் மைந்தனாய்

                        உலகத்தில் கொண்டாட்டமே
                        மகிழ்ச்சியின் உச்சக்கட்டமே - 2    - பெத்லகேம்

2.         பனித்துளியின் சாரலிலே மனம் மகிழ்ந்த தேவன்
            வண்ண மலர்கள் வாசத்திலே மெய்சிலிர்த்த தேவன்
            குயில்கள் பாடும் தாலாட்டை கேட்டு ரசித்த தேவன்
            மந்தைகளின் குரலைக் கேட்டு அழகாய் சிரித்த தேவன்
                        விரைந்தார் விரைந்தார் மேய்ப்பர் யாவரும்
                        பணிந்தார் பணிந்தார் மேன்மை மூவரும்

                        உலகத்தில் கொண்டாட்டமே
                        மகிழ்ச்சியின் உச்சக்கட்டமே - 2    - பெத்லகேம்
           
           
           

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...