ஆதிபன்
பிறந்தார்
35. (47) கரஹரப்பிரியை ஆதிதாளம்
பல்லவி
ஆ!
அம்பர[1]
உம்பர[2]
மும் புகழுந்திரு
ஆதிபன்[3] பிறந்தார்
அனுபல்லவி
ஆதிபன் பிறந்தார்,-அமலாதிபன்[4] பிறந்தார்.
- ஆ!
சரணங்கள்
1. அன்பான பரனே!-அருள் மேவுங் காரணனே!-நவ
அச்சய[5] சச்சிதா[6]-ரட்சகனாகிய
உச்சிதவரனே! - ஆ!
2. ஆதம் பவமற,-நீதம்[7] நிறைவேற,-அன்று
அல்லிராவினில்[8]-தொல்லையிடையினில்[9]
புல்லணையிற் பிறந்தார். - ஆ!
3. ஞானியர் தேட,-வானவர் பாட,-மிக
நன்னய, உன்னத-பன்னரும்[10] மேசையா
இந்நிலம் பிறந்தார். - ஆ!
4. கோனவர்[11] நாட,
தானவர்[12] கொண்டாட-என்று
கோத்திரர்[13] தோத்திரஞ்-சாற்றிட
வே, யூத
கோத்திரன் பிறந்தார். - ஆ!
5. விண்ணுடு[14] தோண,-மன்னவர்
பேண,-ஏரோது,
மைந்தனின் சிந்தையழுந்திக் கலங்கிட
விந்தையாய்ப் பிறந்தார். - ஆ!
- யோ. யாக்கோப்பு
No comments:
Post a Comment