பரம சேனை கொண்டாடினார்
110. இராகம்: ஆனந்த பைரவி. தாளம்: ஆதி
பல்லவி
பரம
சேனை கொண்டாடினார்;
பரன்
இரக்கத்தைப் பாடினார்
சரணங்கள்
1. பரத்திலே இருந்து,
பதி பெத்தலேம் வந்து - 2
பரன்நர ரூ பணிந்து
- 2
பணிவானதிற்
சிறந்து - பரம
2. இரவின் இருளை மாற்றி, இடையர் மனதைத் தேற்றி
- 2
கிருபைப் பரனைப் போற்றிக் - 2
கிறிஸ்தின்
பிறப்பைச் சாற்றி - பரம
3. சர்ப்பப் பேயை
வென்று, சகலர்க் கேய நன்று -
2
அற்புதமாக இன்று - 2
அத்தன் பிறந்தாரென்று - பரம
4. ஆட்டு யிடையர் வந்து,
அண்ணலை காண வந்து - 2
மாட்டுத் தொழுவில் வந்து - 2
மைந்தன் பிறந்தார் இன்று - பரம
5. உன்னதத்தில் மகிமை, பூமியில் சமாதானம் -
2
மானிடர் மேல் பிரியம் - 2
உண்டாக என்றுச் சொல்லி - பரம
- தைரியம் றைற்றர்.
Comments
Post a Comment