12 December 2018

தேவாதி தேவன் ராஜாதி ராஜன்


567
                        தேவாதி தேவன் ராஜாதி ராஜன்
                        பாவ உலகினில் வந்துதித்தார்
                        ஏரோது மாளிகை தேடாத மா ராஜன்
                        ஏழைத் தொழுவத்தில் ஜெனித்தவர்

1.         வானத்தில் தோன்றும் ஓர் நட்சத்திரம்
            வான சாஸ்திரிகள் முன்னில் சென்றாலும்
            பாதை தவறியே சோகமடைந்த பின்
            பாலகன் இயேசுவைக் கண்டடைந்தார்

2.         அன்னை மரியாள் அளவில்லாத
            ஆசீர்வாதங்கள் மிக அடைந்தாள்
            அந்தக் கிருபைகள் சொந்தமுடன் பெற
            ஆண்டவர் இயேசுவைக் கண்டடைவோம்

3.         சத்திரத்திலே ஸ்தலமில்லையே
            சத்திய தேவன் தலை சாய்க்கவே
            தாழ்மை சொரூபியே தாழ இறங்கியே
            தங்கும் தொழுவத்தைக் கண்டடைவோம்

4.         ஆண்டவர் பிறந்த பெத்லகேம்
            ஆயிரங்களில் சிறிய ஸ்தலம்
            இஸ்ரவேல் ராஜனை இம்மானுவேலனை
            இன்பமுடன் தேடிக் கண்டடைவோம்5

5.         கண்ணாரக் கண்டேன்
            உம் இரட்சண்யத்தை
            காலா காலமாகக் காத்திருந்தேன்
            என்று சிமியோன் தன் கையில்
            எடுத்து நம் இயேசுவை
            வாழ்த்தியே கண்டடைந்தான்

6.         தள்ளின கல்லே தலைக்கல்லா
            தாமதமின்றி வருகின்றவர்
            ஆயர் குடிலிடைப் பாலகனாய்த் தோன்றும்
            தூய பிதா முகங் கண்டடைவோம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...