12 December 2018

சுதன் பிறந்தார் சுதன் பிறந்தார்


108. இராகம்: சகானா.                       தாளம்: ஆதி

பல்லவி

                   சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,
                   துதிமிகு தேவ சுதன் பிறந்தார்.

சரணங்கள்

1.         சருவ தயாப சகாய பிரதாப
            கிருபைப் பிதாவின் தற்சுபாவ - தேவா             - துதி

2.         பரமாபி சேக பட்ச சிநேக
            பெருமான் மகத்துவ திரியேக - தேவா              - துதி

3.         மனுடரை மீட்க மறுபிறப் பாக்க
            கனிவினை யாவையும் தீர்க்க - தேவா              - துதி

4.         இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி
            கன்னிமா திரியிடம் நீடி - தேவா                     - துதி

5.         பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
            பத்தர்களுக் காக இப்பாரில் - தேவா                - துதி
-வேதநாயகம் சாத்திரியார்.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...