10 December 2018

பிறந்தார் தெய்வ பாலகன்


அதிசயம் Vol.1

            பிறந்தார் தெய்வ பாலகன் பூமியில் பிறந்தார்
            நிறைவாய் புது வாழ்வினை உலகுக்கு அளித்தார்.
            விண்ணுலக மன்னன் இந்த மண்ணில் வந்து
            ஏழைக் கோலம் எடுத்து இங்கு பிறந்தார்-பிறந்தார்

1.         அன்னை மரியின் அன்பு பாலகனாய்
            புல்லணையில் அவர் தவழ்கின்றார்-2
            நம்மை மீட்க நரர் கோலத்திலே
            அதிசயமாகவே அவதரித்தார்
                        கொண்டாடுவோம் புகழ் பாடுவோம்
                        தேவன் மனிதனானார் - பிறந்தார்

2.         குளிரும் பனியில் அந்த குடிலினிலே
            கந்தை துணியுடன் முன்னணையில்-2
            மீட்பர் ஞானியர் வணங்கிடவே
            தூதர்கள் பாடிட துயில்கின்றார்
                        கொண்டாடுவோம் புகழ் பாடுவோம்
                        தேவன் மனிதனானார் - பிறந்தார்                    

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...