தேவ சேயோ தேவ சேயோ


109. இராகம்: ஆனந்த பைரவி.    தாளம்: ஆதி

பல்லவி

                         தேவ சேயோ, தேவ சேயோ, சீவ வான
                        மன்னா, மா திவ்விய கிருபா சன்னா
                        பாவிகளின் பிர சன்னா,
                        தேவ சேயோ, தேவ சேயோ, ஆண்டருள்
                        செயும்; ஓசன்னோ!

சரணங்கள்

1.         ஆவியாய் அனாதியாய் அமர்ந்த தேவ சேயோ,
            மூவுல கனைத்தையும் முன்தந்த தேவ சேயோ,             - தேவ

2.         சுந்தர மிகும்பரமா னந்த தேவ சேயோ,
            நந்தர் மகிழ்ந் தடிபணிந்த தேவ சேயோ,                       - தேவ

3.         செங்கோல் தவிதிறைஞ்சுந் துங்க தேவ சேயோ,
            மங்காக் கிருபை சிறந்த சங்கைத் தேவ சேயோ,           - தேவ

4.         மாட்டுக் கொட்டிலில் பிறந்த வல்ல தேவ சேயோ,
            மீட்டுக் கொண்டெமைப் புரந்த மேன்மைத் தேவ சேயோ,           - தேவ

-வேதநாயகம் சாத்திரியார்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு