12 December 2018

அதி மங்கல காரணனே

கி.கீ:23

மேலும் அதிக பாடல்களுக்கு

 

Youtube Link

 

Text file Download

 

 

 

 

                             அதி மங்கல காரணனே

 

23. (39)                                                       திஸ்ர ஏகதாளம்

 

                             பல்லவி

          அதி-மங்கல காரணனே

            துதி-தங்கிய பூரணனே-நரர்

            வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த

            வண்மையே[1] தாரணனே[2]!          - அதி

 

                             சரணங்கள்

1.         மதி-மங்கின எங்களுக்கும்

            திதி[3]-சிங்கினர்[4] தங்களுக்கும் - உனின்

            மாட்சியும்,[5] திவ்விய காட்சியும் தோன்றிட

            வையாய் துங்கவனே! - அதி

 

2.         முடி-மன்னர்கள் மேடையையும்,

             மிகு-உன்னத வீடதையும் - எண்ணா

             மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,

             வந்தனையோ தரையில்? - அதி

 

3.         தீய - பேய்த்திரள் ஓடுதற்கும்,

             உம்பர்[6] - வாய்திரள் பாடுதற்கும், - உனைப்

             பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்

             பெற்ற நல் கோலம் இதோ?       - அதி

 

- தேவவரம்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு



[1] அழகு

[2] நிலையானவர்

[3] மகிமை

[4]. இழந்தோர்

[5]. மகிமை

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...