சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து


சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து

29. (52) காமி                                                ஆதிதாளம் 
பல்லவி
             சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து 
            இவர் தாம், இவர் தாம், இவர் தாம்.

சரணங்கள்
 1.         நம தாதி பிதாவின் திருப் பாலர் இவர்,
            அனுகூலர் இவர், மனுவேலர் இவர். - சமாதானம்

2.         நேய கிருபையின் ஒரு சேயர்[1] இவர்,
            பரம ராயர் இவர், நம தாயர்[2] இவர். - சமாதானம்

3.         ஆதி நரர் செய்த தீதறவே,
            அருளானந்தமாய், அடியார் சொந்தமாய். - சமாதானம்

4.         ஆரணம்[3] பாடி, விண்ணோர் ஆடவே,
            அறிஞோர் தேடவே, இடையோர் கூடவே. - சமாதானம்

5.         மெய்யாகவே மே சையாவுமே
            நம்மை நாடினாரே, கிருபை கூறினாரே. - சமாதானம்

6.         அருளானந்த மோட்ச வழி காட்டினாரே,
            நிலை நாட்டினாரே, முடி சூட்டினாரே - சமாதானம்
- வேதநாயகம் சாசுதிரியார்


[1]. மகன்
[2]. மேய்ப்பர்
[3]. வேதம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு