தேவ தேவனே எகோவா
தேவ தேவனே எகோவா
9. (63) துசாவந்தி ரூபகதாளம்
பல்லவி
தேவ
தேவனே, எகோவா,
வா, என் ஜீவனே.
அனுபல்லவி
காவலர்க் குபதேசனே,- கனபாவிகட் கதிநேசனே
- உயர்
கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ
ராஜகிறிஸ்துவாகிய -தேவ
சரணங்கள்
தந்தையர் தர, வந்தவா,-பசு
மந்தை யூடு பிறந்தவா,-கதி
தந்தவா, சொல் உவந்தவா,-மெய்
சிறந்தவா, விண்ணெழுந்தவா,
திவ்ய - தேவ
2. சத்திய வாசனே,- யூதர்குலத்-தவிது ராஜனே,
நித்திய நேசனே,-அடியவர்-நிலைமை ஈசனே,
பத்தருக்குப காரனே,-வளர்
பெத்தலைக் கதிகாரனே,-வளர்
பாரனே, அதி தீரனே,- நல்
உதாரனே, பெல வீரனே, ஜெய -
தேவ
3. வான சீலனே,- மனு உரு-வான கோலனே,
ஞான பாலனே,-அதிசய-நன்மை நூலனே,
பானுவே[4] மனுவேலனே,-இம்
மானுவேல் அனுகூலனே,-கன
பத்தியே தரு துத்தியமே,-நெடு
நித்தியமாய் வளர் வஸ்துவே
ஒரு - தேவ
-வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment