இப்பூவினில் நம் இயேசுவே


1361
                        இப்பூவினில் நம் இயேசுவே
                        தேடியே மீட்க வந்தார்
                        விண்ணோர்களும் பண் பாடவே
                        விந்தையாய் இயேசுவே வந்துதித்தார்

1.         அருணோதயம் பூவில் தோன்றினதே
            பாதை காட்டிடவே
            தாவீதின் வேரில் தோன்றினவர்
            தேவ பாலனிவர்

2.         ஆலோசனை கர்த்தர் நாமமிதே
            வல்ல தேவனிவர்
            கர்த்தத்துவம் அவர் தோளிலுண்டே
            பாதம் போற்றிடுவோம்

3.         அல்லேலூயா நாம் பாடுவோம்
            மீட்பர் பாரில் வந்தார்
            இம்மானுவேலரை நம் தேவனை
            வாழ்த்தி போற்றிடுவோம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே