17 December 2018

சருவ வலிமை கிருபைகள்


கிருபைகள் மிகுந்த சருவேசா

14. சாமா                                                      ஆதிதாளம்

1.          சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசா!
            தரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன்-திருவாசா

2.         தூயசிந்தை உண்மையில் உனையே, தொழுதேத்த!
            தூய ஆவி கொண்டெனை நிரப்பும் - ஜகதீசா!

3.         இருதயத்தைச் சிதற விடாமல் ஒருநேராய்
            இசைத்தமைத்துப் பரவசமாக்கும் - நசரேயா!

4.         அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்று
            அறுபது நூறு முப்பதாய்ப் பெருக - அருளீசா!
- ஜி.சே. வேதநாயகம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...