11 December 2018

உன்னத தேவனுக்கே மகிமை


568
சரணங்கள்
1.         உன்னத தேவனுக்கே மகிமை
            உலகின் சமாதானமாமே
            காரிருள் நீங்கிடக் காசினி மீதிலே
            கதிரொளியாய் ஜெநித்தார்

பல்லவி
          அல்லேலூயா அல்லேலூயா
            அல்லேலூயா துதியவர்க்கே
            அல்லுலூயா துதியவர்க்கே

2.         மானிடர் மேலிவர்க்கன்பிதுவோ
            மனுக்கோலமாய் மனுவேலனார்
            மாட்சிமை யாவையும் துறந்தே இவ்வுலகில்
            மாணொளியாய் ஜெநித்தார்

3.         தாரகை என அவர் தோன்றிடவே,
            நேர் பாதையில் நடந்திடவே,
            தற்பரன் கிருபையும் சத்தியமும் தந்திடத்
            தண்ணொளியாய் ஜெனித்தார்

4.         வாழ்த்துவோம் பாலகன் இயேசு பரன்
            வல்ல தேவனின் ஏக சுதன்
            வாஞ்சித்தாரே எம்மில் வாசம் செய்திடவே
            வானொளியாய் ஜெநித்தார்

5.         தாவீதின் வேரிவராய் அவனின்
            ஜெய ராஜ்ஜியம் ஸ்தாபிக்கவே
            தாசனின் ரூபமாய் தாரணி மீதிலே
            தான் உதித்தார் ஒளியாய்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...