பவனி செல்கின்றார் ராசா


பவனி செல்கின்றார் ராஜா

42. யமுனா கல்யாணி                             ரூபக தாளம்

பல்லவி
                        பவனி செல்கின்றார் ராசா-நாம்
                        பாடிப் புகழ்வோம், நேசா!

அனுபல்லவி
                         அவனிதனிலே மறி[1]மேல் ஏறி
                        ஆனந்தம் பரமானந்தம். - பவனி

சரணங்கள்
 1.         எருசலேமின் பதியே[2] -சுரர்
            கரிசனையுள்ள நிதியே!
            அருகில் நின்ற அனைவர் போற்றும்
            அரசே, எங்கள் சிரசே! - பவனி

2.         பன்னிரண்டு சீஷர் சென்று-நின்று
            பாங்காய் வஸ்திரம் விரிக்க,
            நன்னயம்சேர் மனுவின் சேனை
            நாதம் கீதம் ஓத. - பவனி

3.         குருத்தோலைகள் பிடிக்க,-பாலர்
            கும்புகும்பாகவே நடக்க,
            பெருத்த தொனியாய் ஓசன்னாவென்று
            போற்ற மனம் தேற்ற. - பவனி


[1]. கழுதைக் குட்டி
[2]. மணவாளன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு