ஆதித் திருவார்த்தை திவ்விய
ஆதித் திரு வார்த்தை
20. (37) திஸ்ர
ஏகதாளம்
பல்லவி
அற்புதப் பாலகனாகப்
பிறந்தார்;
ஆதந்
தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
ஆதிரை [1]யோரையீ
டேற்றிட.
அனுபல்லவி
மாசற்ற
ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
மரியாம் கன்னியிட முதித்து
மகிமையை மறந்து தமை வெறுத்து
மனுக்குமாரன் வேஷமாய்,
உன்ன தகஞ்சீர், முகஞ்சீர்
வாசகர்,
மின்னுச்சீர் வாசகர், மேனிநிறம்
எழும்
உன்னத காதலும் பொருந்தவே சர்வ
நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
தாம், தாம், தன்னரர் வன்னரர்
[2]
தீம், தீம், தீமையகற்றிட
சங்கிர்த, சங்கிர்த, சங்கிர்த
சந்தோ
ஷமென சோபனம்பாடவே,
இங்கிர்த,[3] இங்கிர்த,
இங்கிர்த நமது
இருதயத்திலும் எங்கும் நிறைந்திட
- ஆதி
சரணங்கள்
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷத்தானுதித்தார். - ஆதி
2. பூலோகப் பாவ விமோசனர், பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் - ஆதி
3. அல்லேலூயா! சங்கீர்த்தனம், ஆனந்த கீதங்கள்
பாடவே,
அல்லைகள்,[4] தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார். - ஆதி
-வே. சாஸ்திரியார்
Comments
Post a Comment