11 December 2018

ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா


மேசியா நந்தனே

106. (40) ஹரிகாம்போதி                                ஆதி தாளம்

பல்லவி
                   ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்த
                   யேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!

அனுபல்லவி

            ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச

சரணங்கள்

1.         மாசிலா மணியே! மந்த்ர ஆசிலா அணியே! சுந்த்ர
            நேசமே பணியே, தந்திர மோசமே தணியே;
            நிறைவான காந்தனே! இறையான சாந்தனே! மறை - ராச

2.         ஆதியந்த மில்லான் அந்த மாதினுந்தியிலே, முந்த
            வேத பந்தனமாய் வந்த பாதம் வந்தனமே;
            பத ஆமனாமனா! சுதனாமனாமனா! சித[1] - ராச

3.         மேன்மையா சனனே, நன்மை மேவுபோசனனே, தொன்மை
            பான்மை வாசனனே, புன்மை பாவ மோசனனே,
            கிருபா கரா நரா! சருவேசுரா, பரா ஸிரீ - ராச

4.         வீடுதேடவுமே, தந்தை நாடுகூடவுமே, மைந்தர்
            கேடு மூடவுமே, விந்தையோடு பாடவுமே,
            நரவேட மேவினான்; சுரராடு கோவினான்;[2] பர - ராச
- வே. சாஸ்திரியார்



[1] ஞானம்
[2] மோட்சத்தான்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...