11 December 2018

கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு



            கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் வந்தாச்சு
            நமக்காகவே நம் இயேசு பிறந்தாரே - 2

            தேவகுமாரன் பூவில் வந்தார்
            பரலோகத்தை விட்டு இறங்கினார்
            நம்மைப் போல் ஒரு மனிதன் ஆனார்
            நம்மேல் எவ்வளவாய் அன்பு வைத்தார் - கிறிஸ்மஸ்

1.         களிகூர்ந்து பாடிடுவோம்
            நம் ராஜா நம்மிடம் வந்துட்டாரு
            இருள் நீக்கி வெளிச்சத்தை தந்திட
            உலகத்தின் ஒளியாய் பிறந்திட்டாரு
            விண்ணில் மகிமை உலகத்தில் மகிழ்ச்சி
            சமாதானம் எங்கும் பெருகட்டுமே
            மண்ணில் உதித்த மகிமையின் தேவனை
            பணிந்து குனிந்து தொழுதிடுவோமே
                        Come on Rise up shine For Him
                        அவர் ஒளி நம்மிலே
                        let us tell his love today
                        உலகத்திலே - 2

2.         திரள் கூட்ட தூதர்கள் சேனை
            துதிகள் வானில் தொனித்திடவே
            பனியும் குளிரும் மூடிய இரவில்
            பூவில் நம்பிக்கை மலர்ந்திடவே
            முன்னனைமீது மரியாளின் மைந்தன்
            பாலகன் இயேசு பிறந்திட்டாரே
            நம்மை நடத்தும் விடிவெள்ளி சுடராய்
            நம்மோடு நித்தியர் இருக்கிறாரே
                        There is fear no more Shame no more
                        அவர் பெலன் நம்மிலே
                        Let our hearts be filled with joy
                        இன்றும் என்றுமே

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...