22 December 2018

சரணம் சரணம் அனந்தா-1


சரணம் சரணம் அனந்தா

49. (95) நீலாம்புரி                                திஸ்ர ஏகதாளம்

பல்லவி
            சரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,[1]
            தாவீதின் மைந்தா, ஓசன்னா! சரணபதந்தா.

சரணங்கள்
1.         தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே,
            சென்று பல பாடுபடவும் தயவானார்.- சரணம்

2.         தந்து[2] செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்,
            தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான். - சரணம்

3.         பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி,
            பாதகனை யோ? இறையை யோ? விட, என்றான். - சரணம்

 4.        ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று,
            திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார். - சரணம்

 5.        தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே,
            தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக்கொடுத்தான். - சரணம்

 6.        கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக,
            காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான். - சரணம் 
- வே. சாஸ்திரியார்


[1]. சத்து, சித்து, ஆனந்தம் என்னும் இறைநிலை
[2]. தந்திரம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...