ஆர் இவர் ஆரோ


ஆர் இவர் ஆரோ?

24.     (42) செஞ்சுருட்டி                                          சாபுதாளம்

பல்லவி
            ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?
            ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்
            ஆயினர் இவரோ?

சரணங்கள்
 1.         ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலே,
            பாரினில் ஓர் எளிய கன்னிகையின்
            பாலர் ஆனாரோ? -ஆர்

2.         ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோ?
            சீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதி
            சயம் ஆனவரோ? -ஆர்

3.         கர்த்தத்துவமோ காணாது தோள் மேல்;
            சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர்
            தூங்கப் புல் அணையோ? -ஆர்

4.         சேனை தூதர் இதோ! சிறப்புடன் பாட,
            கானகக் கோனர் காண வர, இவர்
            கர்த்தர் ஆவாரோ? -ஆர்
-வே. சாசுதிரியார்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு