சங்கராபரணம் ஆதிதாளம்
பல்லவி
ஆர் இவர்
ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புதப்
பாலகனார்?
சரணங்கள்
1. பாருருவாகுமுன்னே-இருந்த-பரப் பொருள் தானிவரோ?
சீருடன் புவி, வான், அவை பொருள் யாவையுஞ்
சிருட்டித்த மாவலரோ?
2. மேசியா இவர்தானோ?-நம்மை-மேய்த்திடும் நரர்கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி
அன்புள்ள மனசானோ?
3. தித்திக்குந் தீங்கனியோ?-நமது-தேவனின் கண்மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசயமேவிய
விண்ணொளியோ?
4. பட்டத்துத் துரைமகனோ?-நம்மைப்-பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக்
காட்டிடுந் தாயகனோ?
5. ஜீவனின் அப்பமோதான்?-தாகம்-தீர்த்திடும் பானமோதான்?
ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
இவர் தானோ?
https://www.youtube.com/watch?v=vNy0wAH-STw
https://www.youtube.com/watch?v=EKFLrqUYOjc
No comments:
Post a Comment