ஆகமங்கள் புகழ் வேதா


வேதா நமோ நமோ

3. சங்கராபரணம்                                                                        ஆதிதாளம்

திருப்புகழ்

1.         ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ!
            வாகு[1] தங்கு குருநாதா, நமோ நமோ!
            ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, - அருரூபா,

            மாகமண்டல விலாசா,[2] நமோ நமோ!
            மேகபந்தியி னுலாசா, நமோ நமோ!
            வான சங்கம விஸ்வாசா, நமோ நமோ, - மனுவேலா,

            நாகவிம்பம் உயர் கோலா,[3] நமோ நமோ!
            காகமும் பணிசெய் சீலா, நமோ நமோ!
            நாடும் அன்பர் அனுகூலா, நமோ நமோ, - நரதேவா,

            ஏக மந்த்ரமுறு பூமா, நமோ நமோ!
            யூக தந்த்ரவதி சீமா, நமோ நமோ!
            ஏசு வென்ற திருநாமா, நமோ நமோ,      - இறையோனே!

2.         அறிவி னுருவாகிய மூலா, நமோ நமோ!
            மறையவர்கள் தேடிய நூலா, நமோ நமோ!
            அதிசய பராபர சீலா, நமோ நமோ, - அருளாளா,

            பொறிவினை யுறாத சரீரா, நமோ நமோ!
            குறையணுவிலாத குமாரா, நமோ நமோ!
            புவன முழுதாள் அதிகாரா, நமோ நமோ, - புதுவேதா,

            நிறைவழியின் மேவிய கோனே, நமோ நமோ!
            முறைகள் தவறாத விணோனே, நமோ நமோ!
            நிதிபெருகு மாரச தேனே! நமோ நமோ, - நெறிநீதா,

            இறை தவிது பாடிய கீதா, நமோ நமோ!
            பறைகள்பல கூடிய போதா, நமோ நமோ!
            எருசலை யினீடிய நாதா, நமோ நமோ, - இறையோனே.
-வேதநாயகம் சாசுதிரியார்


[1] அழகு
[2] மாகமண்டல விலாசா= விண்ணெங்கும் வியாபித்திருக்கின்றவனே
[3] நாகவிம்பம் உயர் கோலா - வான விரிவைப் போன்று எல்லையில்லாமல் மேம்பட்டிருக்கும் அழகினையுடையவனே!

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு