11 December 2018

ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே

கி.கீ:319

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                             கன்னிமரியாளின் கீதம்

 

319. உசேனி                                                  ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          ஆத்துமா கர்த்தரைத் துதிக்கின்றதே,-என்றன்

            ஆவியும் அவரில் களிக்கின்றதே,-இதோ!

 

                             அனுபல்லவி

 

                        நேர்த்தியாய்ப் பாடுவேன், நிதங்கனிந்தே எந்தன்

                        பார்த்திப னுட[1] பதந் தினம்பணிந்தே.-இதோ! - ஆத்துமா

 

                             சரணங்கள்

 

1.         அடிமையின் தாழ்மையைப் பார்த்தாரே,-என்னை

            அனைவரும் பாக்கிய ளென்பாரே,

            முடிவில்லா மகிமை செய்தாரே,-பல

            முடையவர் பரிசுத்தர் என்பாரே.-இதோ! - ஆத்துமா

 

2.         பயப்படும் பத்தருக் கிரங்குகிறார்,-நரர்

            பார்த்திடப் பெருஞ்செயல் புரிகின்றார்;

            உயர்த்திடு நரர்களைச் சிதறடிப்பார்,-தன்னை

            உகந்தவர் தாழ்ந்திடில் உயர்த்துகின்றார்.-இதோ! - ஆத்துமா

 

3.         முற்பிதாக் களுக்கவர் சொன்னதுபோல்-அந்த

            முனியாபி ராமுட ஜனமதன்பால்,

            நட்புடன் நினைவொடு நல்லிசரேல்-அவன்

            நலம்பெற ஆதரித் தார்மறவேல்.-இதோ! - ஆத்துமா

 

- ச.த. ஞானமணி



[1] அரசனுடைய

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...