எந்தை எந்தை முந்துந் திருமகன்


107. இராகம்: ஆங்கிலம்.     தாளம்: ஆதி

1.       எந்தை எந்தை முந்துந் திருமகன்
          நிந்தை நிந்தை உந்தும் புவிதனில்,
            விந்தை! விந்தை! மனுவுருவாய்
            வந்தனர்; சந்தோடமே!

                        ஆ! சந்தோஷம்! துதி சொல்லுவோம்;
                        ஆ! சந்தோஷம்! குதி கொள்ளுவோம்;
                        ஆ! சந்தோஷம்! கன மகிமை
                        அவர் என்றும் பெறுகுவரே

2.         வானோ ரானோர், ஞானிகள், இடையர்கள்
            கான தான மான பல செயல்
            வான மீன நடையொடுமே
            மோனம் மிகுதனமே.

                        தங்கள் சிறுபுல் லணைதனிலே
                        எங்கண் மணிஅனை அருகினிலே
                        இங்கிங் கெனவழு கிறகுரலோ!
                        இது பரன் உறு திறலோ?

3.         துங்கம் துங்கம் துங்கம் நிறை வலு
            சிங்கம் சிங்கமு கங்கண் டலகைப
            துங்கும் சிங்கும் பங்கமுறும்
            மங்கும் மடிவுறுமே.

                        மாபல சாலிகள் பாலரொடும்
                        மாகவி பாடுமின் ஆடவரும்
                        பூவையர் ஆடுவிர் ஆவலொடும்
                        புவிபுரந் திடுவோர் வந்தார்.
-மறைத்திரு. ந. தைரியம், வத்தலக்குண்டு.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு