14 December 2018

ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி யேகர்க்

கி.கீ:10

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   அனவரதமும் தோத்திரம்

 

10. (31) பூரிகல்யாணி                                               ஆதிதாளம்

 

                             பல்லவி

 

          ஆதிபிதாக் குமாரன்-ஆவி திரி யேகர்க்-கு

            அனவரதமும்[1] தோத்திரம்!-திரியேகர்க்கு-கு

            அனவரதமும் தோத்திரம்.

 

                             அனுபல்லவி

 

            நீத[2] முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,

            நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,

            நிறைந்த சத்திய ஞான மனோகர,

            உறைந்த நித்திய வேத குணாகர,

            நீடு வாரி[3] திரை சூழு மேதினியை

            மூடு பாவ இருள் ஓடவே அருள்செய். - ஆதி

 

                             சரணங்கள்

 

1.         எங்கணும் நிறைந்த நாதர்-பரிசுத்தர்கள்

            என்றென்றைக்கும் பணிபாதர்,

            துங்க[4]மாமறைப் பிரபோதர்[5],- கடைசி நடு

            சோதனை செய் அதி நீதர்,

            பங்கில்லான்,[6] தாபம் இல்லான் பகர் அடி[7] முடிவில்லான்,

            பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்

            பண்பதாய்[8]சு யம்பு விவேகன்,

            அன்பிரக்கத யாளப் பிரவாகன்[9]

            பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி

            பாலனத்தை[10]யும்பண் பாய்நடத்தி அருள். - ஆதி

 

2.         நீதியின் செங்கோல் கைக்கொண்டு-நடத்தினால் நாம்

            நீணிலத்தில்லாமல் அழிந்து,

            தீதறு நரகில் தள்ளுண்டு-மடிவோ மென்று

            தேவ திருவுளம் உணர்ந்து,

            பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு

            பரன் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று

            பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்,

            இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்

            பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்

            சூரியன் முன் இருள் போலவே சிதறும். - ஆதி

 

 

- காபிரியேல் உபதேசியார்



[1] எப்போதும்

[2]. நீதி

[3]. கடல்

[4] தூய

[5] பேரறிவுடையவர்

[6] நீதியாளர்

[7]. ஆதி-தொடக்கம்

[8] தானக உருவானவர்

[9] பூரணர்

[10] பரிபாலனம்-பாதுகாத்தல்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...