11 December 2018

இன்று உங்களுக்கு தாவீதின் ஊரில்


1890
          இன்று உங்களுக்கு தாவீதின் ஊரில்
          தேவ மைந்தன் இயேசு பிறந்துள்ளார்

                        நற்செய்தி இது நற்செய்தி (2)
                        எல்லோருக்கும் சிறந்த நற்செய்தி (2)

1.         பரிசுத்த ஆவியால் கன்னியின் வயிற்றிலே
            கரு உருவாகியே கர்த்தர் பிறந்தார் (2)
            காவிய நாயகன் பரம தேவன்
            மானிடனானார் பாவியை மீட்க             - நற்செய்தி

2.         வானத்திலே தூதரும் பாடியே மகிழ்ந்திட
            மந்தை மேய்ப்பரும் துதித்துப் போற்றிட
            உன்னதமானவர் உலகில் உதித்தார் (2)
            இம்மானுவேலர் நம்மோடிருப்பார்          - நற்செய்தி

3.         அந்தகார இருளுமே நம்மைவிட்டு அகன்றிடும்
            ஆனந்தமான வாழ்வு வந்திடும்
            அல்லேலூயா பாடி நாம் மகிழ் கொண்டாட
            ஆர்ப்பரிப்போம் நாம் ஆனந்தமாக        - நற்செய்தி


No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...