மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க‌


19. இராகம்: செஞ்சுருட்டி.       தாளம்: ஆதி

கண்ணிகள்

1.         மன்னுயிர்க்காகத் தன்னுயிர் விடுக்க‌
            வல்ல பராபரன் வந்தார், வந்தார்.                       - பாவீ

2.         இந்நில‌ம் புர‌க்க‌, உன்ன‌த‌த் திருந்தே
            ஏக‌ ப‌ராப‌ர‌ன் வ‌ந்தார், வ‌ந்தார்.                          -பாவீ

3.         வான‌வ‌ர் ப‌ணியுஞ் சேனையின் க‌ருத்த‌ர்,
            ம‌கிமைப் ப‌ராப‌ர‌ன் வ‌ந்தார், வ‌ந்தார்.                 -பாவீ

4.         நித்திய‌ பிதாவின் நேய‌ குமாரன்
            நேமி அனைத்தும் வாழ‌ வ‌ந்தார், வ‌ந்தார்         -பாவீ

5.         மெய்யான‌ தேவ‌ன், மெய்யான‌ ம‌னுட‌ன்
            மேசியா, ஏசையா வ‌ந்தார், வ‌ந்தார்.                   -பாவீ

6.         தீவினை நாச‌ர், பாவிகள் நேச‌ர்
            தேவ‌ கிறிஸ்தையா வ‌ந்தார், வ‌ந்தார்.               -பாவீ

 7.        செய‌ அனுகூல‌ர், திவ்விய‌ பால‌ர்
            திரு ம‌னுவேல‌னே வ‌ந்தார், வ‌ந்தார்.                  -பாவீ
-வேதநாயகம் சாசுதிரியார்


Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு