இயேசு மானிடனாய் பிறந்தார்


571
                        இயேசு மானிடனாய் பிறந்தார்
                        இந்த லோகத்தை மீட்டிடவே
                        இறைவன் ஒளியாய் இருளில்
                        உதித்தார் இந்த நற்செய்தி
                        சாற்றிடுவோம் இயேசு

1.         மேய்ப்பர்கள் ராவினிலே
            தங்கள் மந்தையைக் காத்திருக்க
            தூதர்கள் வானத்திலே தோன்றி
            தேவனைத் துதித்தனரே - இயேசு

2.         ஆலோசனைக் கர்த்தரே
            இவர் அற்புதமானவரே
            விண் சமாதான பிரபு
            சர்வ வல்லவர் பிறந்தனரே - இயேசு

3.         மாட்டுத் தொழுவத்திலே
            பரன் முன்னணையில் பிறந்தார்
            தாழ்மையைப் பின்பற்றுவோம்
            அவர் ஏழ்மையின் பாதையிலே - இயேசு

4.         பொன்பொருள் தூபவர்க்கம்
            வெள்ளைப் போளமும் காணிக்கையே
            சாட்சியாய் கொண்டு சென்றே
            வான சாஸ்திரிகள் பணிந்தனரே - இயேசு

5.         அன்னாளும் ஆலயத்தில்
            அன்று ஆண்டவரை அறிந்தே
            தீர்க்கதரிசனமே கூறி
            தூயனைப் புகழ்ந்தனரே - இயேசு

6.         யாக்கோபில் ஓர் நட்சத்ரம்
            இவர் வாக்கு மாறாதவரே
            கண்ணிமை நேரத்திலே
            நம்மை விண்ணதில் சேர்த்திடுவார் - இயேசு

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு