அப்பா தயாள குணாநந்த
அப்பா தயாள குணநந்தா மோனந்த வேதா
47. (92) நாதநமக்கிரியை சாபுதாளம்
கண்ணிகள்
1. அப்பா, தயாள
குணாநந்த மோனந்த வேதா,-பொல்லா
இப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?
2. குற்றம் சுமத்தப் பொய்ச் சாட்சிகளைத் தேடினாரோ?-அந்தச்
செற்றலர்[1] எல்லாம்
திரண்டேகமாய்க் கூடினாரோ?
3. கன்னம் அதைத்ததோ? கண்கள் சிவந்ததோ? சுவாமி,-பொறி
மின்னிக் கலங்கி, விசனம் உற்றீரோ, நன்
னேமி?
4. மெய்யான சாட்சி இட்டையனே, சொன்ன உம் மீதே-தீயர்
பொய்யான சாட்சி இட்டையோ, சுமத்தினார் தீதே.
5. என் கட்டை நீக்கிஈடேற்ற வாதைக்குள்ளானீரோ?-உம்மைப்
பின் கட்டாய்க் கட்டி, பிலாத்திடங்கொண்டு
போனாரோ?
6. இத்தனை பாடுகள் நீர் பட்ட தென்கொடும் பாவமே,-என்றன்
கர்த்தனே, உன் மீதில் வந்ததையோ, தேவ கோபமே?
7. நீர் பட்ட பாட்டைப்போல், ஆர் பட்டுத்தாங்குவார்,
தேவே?-பல
கார்பட்ட[2] நெஞ்சமும்
சீர்பட்டுப் போகுமே, கோவே.
-
ஏசுதாசன் அண்ணாவியார்
Comments
Post a Comment