இது அதிசயமே எனக்கானந்தமே
566
இது
அதிசயமே எனக்கானந்தமே
இன்ப பரலோகம் துறந்தெனக்காய்
இகத்தில் இயேசுவே மனுவாய்
உதித்தார்
1. விண்ணையும் துறந்து இம்மண்ணுலகில்
என்னையும் எண்ணியே தம் மனதில்
தாழ்மையின் ரூபமே தாம் எடுத்து
தயாபரனாய் தோன்றினார் - தேவ
2. மானிடர் மன இருள் நீக்கிடும் மெய்
மா ப்ரபையோடிலங்கும் மகிபன்
மன்னுயிர் மீட்கவே தன்னுயிரைத்
தந்தாரே விந்தையிரே - கர்த்தர்
3. சமாதான பிரபுவாய் ஜெகத்தில் வந்தே
சமாதானம் எனதுள்ளமே பொழிந்தார்
நன்றியோடே நானும் பாடிடுவேன்
தற்பரன் இயேசுவையே - எந்தன்
4. பறந்திடும் பறவைக்கும் கூடு உண்டே
பதுங்கிட நரிக்கும் ஓர் குழியுமுண்டே
இயேசுவுக்கே தலை சாய்திடவோ
எங்குமோர் ஸ்தலமுமில்லை - பூவில்
5. சாந்தமும் தாழ்மையும் நீதியுமே
சிறப்புடன் விளங்கிடுதே - அவரில்
இந்நுகமே எனக்கெந்நாளுமே
சொந்த மென்றேற்றிடுவேன் - என்றும்
Comments
Post a Comment