ஓசன்னா பாடுவோம் ஏசுவின் தாசரே


ஓசன்னா பாடுவோம்

43. சங்கராபரணம்                                          ஆதி தாளம்

பல்லவி
                    ஓசன்னா பாடுவோம், ஏசுவின் தாசரே,
                    உன்னதத்திலே தாவீது மைந்தனுக்கு ஓசன்னா!

சரணங்கள்
1.         முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்,
            அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த்துதி பாடுவோம்.

2.         சின்ன மறி மீதில்ஏறி அன்பர் பவனி போனார்
            இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்.

3.         பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
            பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்.

4.         பாலர்களின் கீதம் கேட்டுப் பாசமாக மகிழ்ந்தார்,
            ஜாலர் வீணையோடுபாடித் தாளைமுத்தி செய்குவோம்.

5.         குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்,
            கூடி அருள் பெற்றுநாமும் த்ரியேகரைப் போற்றுவோம்.
- யோ. பால்மர்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே