பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை


பெத்லேகம் ஊரோரம்

32. சங்கராபரணம்                                          ஏகதாளம்
சரணங்கள்
1.         பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
            கர்த்தன் ஏசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
            பக்தியுடன் இத்தினம் வாஓடிப் - பெத்

2.         காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
            சீலகன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
            பாலனான யேசுநமின் சொத்து - பெத்

3.         எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
            புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்கு ஈரம்
            தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம் - பெத்

4.         வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ,
            வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல் பூடோ
            ஆன பழங் கந்தை என்ன பாடோ? - பெத்

5.         அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
            மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
            இன்றிரவில் என்ன இந்த மோடி - பெத்

6.         ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு,
            அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு,
            நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு - பெத்

7.         இந்திரியுடு[1] கண்டரசர் மூவர் நடந்தாரே,
            சந்திரந்[2] தூபம் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
            விந்தையது பார்க்கலாம் வா நேரே - பெத்


[1]. கிழக்கு நட்சத்திரம்
[2]. பொன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு