11 December 2018

ஏது மனு வேடந் தரித்தீர்?


125. இராகம்: காப்பி.                           தாளம்: ஆதி.

பல்லவி

                   ஏது மனு வேடந் தரித்தீர்?
                   ஏசையா மேசையா ஆசையாய்ச் சுவாமி  - ஏது

அனுபல்லவி

1.         மாது எவை வாழவோ? மருளலகை தாழவோ?
            ஏதேன் வினை மாளவோ? எம்மை யர சரளவோ? - ஏது

2.         காயமில்லா நேயனே கருணை மொழி வாயனே
            தூய தூய தூயனே தோத்திரம் நல் ஆயனே    - ஏது

3.         சுத்த தேவ பாலனே சுந்தரக் குமாரனே
            நித்தம் துதி ஏகனே நேமியாள் செங்கோலனே   - ஏது

4.         நீதி நிறை வேறவும் நீசர் கரை யேறவும்
            ஆதி பாவ மாறவும் அண்டினோர் விண் ணேறவும் - ஏது


No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...