03 November 2018

நல்ல செய்தி இயேசுவை


407. S.S.1079

"We have heard the joyful sound"

1.         நல்ல செய்தி! யேசுவை
                        நோக்கிப்பார்! ரட்சிப்பார்!
            நம்பிவந்து அவரை
                        நோக்கிப்பார்! ரட்சிப்பார்!
            எந்தப் பாவியாயினும்
            தள்ளமாட்டேன் என்கிறார்
            த்ரோகம் செய்த போதிலும்
                        நோக்கிப்பார்! ரட்சிப்பார்!

2.         எங்கும் செய்தி சொல்லுவோம்
                        நோக்கிப்பார்! ரட்சிப்பார்!
            தேசாதேசம் கூறுவோம்
                        நோக்கிப்பார்! ரட்சிப்பார்!
            எந்த நாடு தீவிலும்
            யேசு காத்து நிற்கிறார்
            மூடன் நீசன் ஆகிலும்
                        நோக்கிப்பார்! ரட்சிப்பார்!

3.         இன்னும் கேள்! மா நேசராம்!
                        யேசுவே! காக்கிறார்!
            நம்பும் பக்தரையெல்லாம்
                        யேசுவே! காக்கிறார்!
            சற்றும் தவறாமலும்
            கையில் ஏந்திக்கொள்ளுவார்
            கேடுபாடில்லாமலும்
                        யேசுவே! காக்கிறார்.

4.         சுவிசேஷம் இதுவே
                        யேசுவே! காக்கிறார்!
            பாவம் நீங்கி பின்னுமே
                        யேசுவே! காக்கிறார்!
            மோட்சஞ் சேருமளவும்
            தாங்கிக் கொண்டே இருப்பார்
            தீமையைச் செய்யாமலும்
                        யேசுவே! காக்கிறார்

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...