03 November 2018

பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா


392. S.S.379

"Have you been to Jesus"

1.         பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா
            ஒப்பில்லாத் திருஸ்நானத்தினால்?
            பாவதோஷம் நீங்க நம்பினீர்களா
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

பல்லவி

                        மாசில்லா-சுத்தமா?
                        திருப்புண்ணிய தீர்த்தத்தினால்
                        குற்றம் நீங்கி விடகுணம் மாறிற்றா
                        ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

2.         பரலோக சிந்தை அணிந்தீர்களா
            வல்ல மீட்பர் தயாளத்தினால்?
            மறுஜன்ம குணமடைந்தீர்களா
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

3.         மணவாளன் வரக் களிப்பீர்களா
            தூய நதியின் ஸ்நானத்தினால்?
            மோட்ச கரை ஏறிச்சுகிப்பீர்களா
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்?

4.         மாசு கரை நீங்கும், நீசப்பாவியே!
            சுத்தரத்தத்தின் சக்தியினால்
            முத்திப்பேறுண்டாகும் குற்றவாளியே!
            ஆட்டுக்குட்டியின் ரத்தத்தினால்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...