கல்வாரி சிலுவையில்


412. S.A.173

"On the cross of calvary"

1.         கல்வாரி சிலுவையில்
            தொங்கி ஜீவனை விட்டீர்;
            மானிடரிதயத்தில்
                        மாறுதல் உண்டாக்க நீர்,
            மாசற்ற ஜீவ நதி,
                        பாவம் போக்கத் திறந்தீர்;
            எனக்காக மரித்தீர்
                        கல்வாரி சிலுவையில்.

                        அக்கல்வாரி! அக்கல்வாரி!
                        எனக்கேசு மரித்தார்
                        கல்வாரி சிலுவையில்

2.         இந்த அன்பின் பாசத்தான்
                        மீட்பருக்கு எந்தனை
            முழு தத்தஞ் செய்யத்தான்,
                        ஆவி, ஆத்மா தேகத்தை,
            சர்வாங்க பலியாக
                        யேசுவே படைக்கிறேன்;
            எனக்காக மரித்தீர்,
                        கல்வாரி சிலுவையில்.

3.         நானுமக்குச் சொந்தமே,
                        என்னையேற்றுக்கொள்ளுமேன்
            நேச மீட்பர் நித்தமே
                        என்னில் வாசம் பண்ணுமேன்,
            பாவத்தை வெல்ல நெஞ்சை
                        ஸ்திரமாகத் தாருமேன்;
            எனக்காக மரித்தீர்,
                        கல்வாரி சிலுவையில்.

4.         நேசரே! நீர் பட்ட நாள்,
                        பூலோக மதிர்ந்தது
            குத்துண்டு மரித்ததால்
                        கோவே! இரட்சை வந்தது;
            உம்மை நான் விடுவேனோ?
                        எந்தன் ஆத்ம நாயகா!
            எனக்காக மரித்தீர்,
                        கல்வாரி சிலுவையில்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு