ஏகோபித்துச் சேருங்களேன்


361. S.S.207

"Be glad in the Lord"

1.         ஏகோபித்துச் சேருங்களேன்
            கர்த்தாவில் ஆனந்திக்கவும்,
            விசாரம் விட்டோங்களேன்
            கெம்பீரித் தாராதிக்கவும்.

                        செய்வோம்! செய்வோம்!
                        திரியேகரைத் துதிசெய்வோம்!

2.         பராபரன் மெய் வஸ்துவாம்
            தயாபரர் ஆண்டவரே
            வந்தார் வையகத்திலேயாம்
            இரட்சிக்க வல்லவரே.

3.         பிசாசின் உபாயங்களால்
            பயங்கர மோசமுண்டாம்
            ஆனாலும் தேவாவியினால்
            ஒத்தாசையும் ஜெயமுமாம்.

4.         ஏகோபித்துப் பாடுங்களேன்
            மகோற்ச வானந்தத்தினால்
            திரியேகரைப் போற்றுங்களேன்
            கெம்பீர சங்கீதத்தினால்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே