இயேசுவை நம்பி பற்றிக் கொண்டேன்


390. S.S.873  Blessed assurance

            இயேசுவை நம்பி பற்றிக் கொண்டேன்
            மாட்சிமையான மீட்பைப் பெற்றேன்
            தேவ குமாரன் ரட்சை செய்தார்;
            பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார்.

                        இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன்,
                        நேசரைப் பார்த்துப் பூரிக்கிறேன்,
                        மீட்பரை நம்பி நேசிக்கிறேன்,
                        நீடூழி காலம் ஸ்தோத்தரிப்பேன்.

2.         அன்பு பாராட்டி, காப்பவராய்
            எந்தனைத் தாங்கி, பூரணமாய்
            இன்பமும் நித்தம் ஊட்டுகிறார்
            இன்னும் நீங்காமல் பாதுகாப்பார்

3.         மெய்ச் சமாதானம் ரம்மியமும்
            துய்ய தேவாவி வல்லமையும்
            புண்ணிய நாதர் தந்து விட்டார்
            விண்ணிலும் சேர்த்து வாழச்செய்வார்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே