இரட்சிப்பை யுயர்த்திக் கூறுவோம்
422. S.A.474
"Shout aloud"
1. இரட்சிப்பை
யுயர்த்திக் கூறுவோம்
லோகம்
நடுங்க
நரகாக்கினையைச் சொல்லுவோம்
பாவமடங்க
பூர்வ கால தேவ தாசர்
விஸ்தரித்தாப் போல்;
மோட்ச லோகம்
போகுமுன்னமே
செல்வோம்; செல்வோம்
ஆர்ப்பரிப்புடனே;
செய்வோம், செய்வோம்;
போர் பலத்துடனே;
நானா ஜாதி பாஷைக்காரர்
இரட்சிப்படைய
மோட்ச லோகம்
போகு முன்னே.
2. யேசு வீரர் யுத்த சத்தம்
பூமியெங்கும் கேள்!
மீட்படைந்த பேதைகளின்
சாட்சிகளுங்கேள்!
முழு லோகத்தையும் வெல்ல
இன்னும் கொஞ்சநாள்
மோட்ச லோகம்
போகுமுன்னே.
3. தீதாய்ச் சத்துருக்க ளென்ன
சொன்ன போதிலும்
சுத்தாவியின் பலத்தை
பெற்று யாவிலும்
உண்மையாகப் போர் புரிந்தால்
வெல்வோம் சாவிலும்
மோட்ச லோகம்
போகுமுன்னே.
Comments
Post a Comment