03 November 2018

தூய்மை பெற நாடு கர்த்தர் பாதமே


349. S.S.608                                                              11, 11, 11, 11.

"Take time to be holy"

1.          தூய்மை பெற நாடு; கர்த்தர் பாதமே
            நிலைத்தவர் வார்த்தை உட்கொள்ளென்றுமே;
            கூடி பக்தரோடு சோர்ந்தோர் தாங்குவாய்,
            யாவிலுமே தெய்வ தயை நாடுவாய்.

2.         தூய்மை பெற நாடு; லோகக் கோஷ்டத்தில்
            தனித்திரு நாளும் அவர் பாதத்தில்;
            யேசுவைப் போலாவாய், நோக்கின் அவரை
            பார்ப்போர் உன்னில் காண்பார் அவர் சாயலை.

3.         தூய்மைபெற நாடு; கர்த்தர் நடத்த,
            என்ன நேரிட்டாலும், அவர் பின் செல்ல;
            இன்பம் துன்பம் நேர்ந்தும் விடாய் அவரை;
            நோக்கியவர் வாக்கில் வைப்பாய் நம்பிக்கை.

4.         தூய்மை பெற நாடு; ஆத்மா அமர்ந்து,
            சிந்தை செய்கை யாவும் அவர்க்குட்பட்டு,
            அன்பின் ஜீவ ஊற்றைச் சேர்ந்து ருசிக்க;
            முற்றும் தூய்மையாவாய் விண்ணில் வசிக்க.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...