என்றென்றும் ஜீவிப்போர் அதரிசனர்
347. St. Denio 11,
11, 11, 11.
"Immortal invisible God only
wise."
1. என்றென்றும்
ஜீவிப்போர் அதரிசனர்,
எட்டா ஒளியிலுள்ளோர் சர்வ ஞானர்,
மா மேன்மை மகத்துவர் அநாதியோராம்;
சர்வவல்லோர் வென்றோர் நாமம் போற்றுவோம்.
2. ஓய்வோ துரிதமோ இன்றி ஒளிபோல்
ஒடுங்கா பொன்றா சக்தியோடாள்வதால்,
வான் எட்டும் மலைபோல் உம் நீதி நிற்கும்;
அன்பு நன்மை பெய்யும் உந்தன் மேகமும்.
3. பேருயிர், சிற்றுயிர் ஜீவன் தேவரீர்,
யாவர்க்குள்ளும் உய்வீர் மெய்யாம் ஜீவன்
நீர்;
மலர் இலைபோல் மலர்வோம், செழிப்போம்,
உதிர்வோம், சாவோம், நீரோ மாறாதோராம்.
4. மா மாட்சி பிதா, தூய ஜோதி தந்தாய்!
தாழுவர் உம் தூதர் மா வணக்கமாய்;
துதிப்போம் மகத்தாய்க் காணத் தோற்றுவீர்,
கண் கூசும் ஜோதியாம் ஜோதி தேவரீர்.
Comments
Post a Comment