ஆத்ம நேசர் ஆவல்கொண்டு
380. Bullinger, St. Helen's 8,
5, 8, 3.
1. ஆத்ம நேசர்
ஆவல்கொண்டு
காத்து
நிற்கிறார்
“நீச பாவி வா என்னண்டை”
என்கிறார்.
2. பாடுபட்டேன் சிலுவையில்
மாண்டேன் உனக்காய்,
எந்தன் மீட்பைத் தள்ளிடாமல்
நம்புவாய்.
3. பாவத்தால் நீ கட்டுண்டாலும்
ரட்சகர் நானே,
பூரிப்பாய் உன் மீட்பர் பின்னே
செல்வாயே.
4. நேசர் உன்னை மாறி மாறி
கூவி நிற்கிறார்,
பிராணநாதர் இன்ப சத்தம்
கேட்கப்பார்.
5. இப்போதே ரட்சண்ய காலம்,
தாமதியாதே,
மீட்பர்பாதம் அண்டிக்கொள்வாய்
இன்றைக்கே.
6. யேசுநாதா! இதோ வந்தேன்
ஏற்றுக் கொள்ளுமே,
பாவம் போக்கி மோட்ச பாக்யம்
தாருமே.
Comments
Post a Comment